"பாரினில் சிறந்த நாடு என் பாரத நாடு"என்ற பாரதியின் புகழுரையுடன் துவங்குகிறேன். முப்புரம் கடலாலும் அதன் தலையில் கிரீடம் போல் இமய மலையாலும் இயற்கையால் போற்றப்பட்ட தேசம் இது.உலகின் மிகப்பெரிய
ஜனநாயக நாடு என்பது மட்டுமல்ல,அதிக இளைஞர்களையும் அள்ள அள்ள குறையாத கனிம வளங்களையும் கொண்ட நாடு இது.பாரம்பரியத்தில்,கலாச்சாரத்தில், வேற்றுமையில் ஒற்றுமையில்,என அனைத்திலும் தன்னிகரற்று விளங்குகிறது.
அன்றே ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பை அகிம்சையால் வென்று காட்டிய நாடு இது.
"யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்ற கணியனாரின் கூற்றின் மூலம் உலகையே அன்பால் வென்ற நாடு இது.
ஆங்கிலம் போன்ற அந்நிய மொழிகள் பல ஆக்கிரமிக்க வந்தாலும் பல மொழிகள் பேசும் என் தேசம் தன தாய் மொழியையே முதல் மொழியாக ஏற்கிறது.
பொருளாதாரத்தில் உலகின் முதல் தரமான சந்தையாக இந்தியாவே விளங்குகிறது.
கல்வி,அறிவியலில் உள்ளங்கையில் ஏந்தும் அளவு சிறிய அளவில் கூட செயற்கைகோளை நம் பள்ளி மாணவன் மூலமே தயாரிக்க முடியும் என NASA மூலம் அனுப்பி வென்று காட்டியது இந்தியாவே.
சிறப்பு மிக்க ரபேல் போர் விமானங்கள்,அணு ஆயுதங்கள் என அனைத்து திறன்களும் மிக்க நாடாக என் தேசம் திகழ்ந்தாலும் அண்டை நாடுகளுடன் புரிந்துணர்வுடனே திகழ்கிறது எனது இந்தியா.
அகிம்சை என்னும் தந்திரம்!
பெற்று தந்தது சுதந்திரம்!
நன்றி.
0 Comments