கார் முகிலை கண்டால்

உனக்கு கொண்டாட்டம்!

நீ சிறகு விரித்தால்

கவிஞருக்கெல்லாம் சொல்லோட்டம்!

உலக அழகியின் கண்கள் 

ஆயிரம் உண்டு உன் சிறகில்!

 கண்ணாடி மண்டபம் குலுங்கி ஆடும் 

நடனம் கண்டேன் உன்னிடத்தில்!

உன் கொண்டைகுடுமி குலுங்க ஆடும்

நடனம் மதியை மயக்கும்!

நீ தொகை விரித்து ஆடும் போது

காண்போருக்கும் சிறகு முளைக்கும் !

அழகு பெண்ணை காணும் போது 

மயில் போல் மங்கை என்பர்!

நீ உதிர்த்த சிறகையும் அழகாய் எண்ணி

வைத்து பார்த்தே மகிழ்வர்!

பறவை இனத்தின் சிகரமாக 

உன்னை எண்ணியதாலேயே,

என் இந்திய நாட்டின் பறவையாக 

உன்னையே ஏற்று மகிழ்வோம்!