Header Ads Widget

என் மனம் கவர்ந்த தலைவர் - முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

 என் மனம் கவர்ந்த தலைவர் - முஹம்மது நபி  (ஸல்) அவர்கள்  

இவர்களின் சிறப்பை பற்றி மிக சில வார்த்தைகள் மட்டும் கூறுகிறேன்.இவர் உங்கள் மனதையும் கவருவார் பாருங்கள்.வரலாற்றிலே பார்க்கிறோம் பல தலைவர்களை காண்கிறோம்.அவர்கள் எத்துறையில் மேம்பட்டிருந்தாலும் கல்வி,ராஜதந்திரம்,சமூககட்டுப்பாடு,விஞ்ஞானம்,மருத்துவம்,
ஆன்மீகம் என எத்துறையை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களால் நபிகளாரை மிகைக்க முடியாது.ஏனென்றால் இவர்கள் தலைவருக்கெல்லாம் தலைவர் ஆவார்கள்.


மற்ற தலைவரை பற்றி அறிய விரும்பும் போது சில பகுதிகள் மட்டுமே தெரியும்.ஆனால்,நபிகளார் ஒருவரே ஆதிமுதல் அந்தம் வரை மிக தெளிவான மிக வெளிப்படையான வரலாற்றுடன் உள்ளவர்கள்.அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்,ஒவ்வொரு அசைவும் வரலாறு மிக தெளிவாக விவரிக்கின்றன.அதின் அணு அளவு தவறுமில்லை.

மூன்றாவதாக என் மனம் கவர்ந்ததற்க்கு முக்கிய காரணம் மற்ற தலைவர்கலெல்லாம் ஒரு விஷயத்தை கண்டுபிடித்தற்காக அல்லது ஒரு பிரச்சனையின் தீர்வுக்காக  அல்லது ஒரு இனத்தின் ஒரு நாட்டின் விடுதலைக்காக போராடி வென்றவர்கள்.அனால்,எனது நபி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எனக்காக என்னுடைய வெற்றிக்காக என ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடும்படி வாழ்ந்து காட்டி சிறந்த முன்மாதிரியை பதித்து சென்றவர்கள் வெற்றிக்கான சுலபவழிகாட்டிய நபிகளாரின் நல்வழியை பின்பற்றி இலக்கை அடைந்து உயர்வோம்.





Post a Comment

0 Comments