நீ மழலை மொழியில் 
பேசிடும் போது
தமிழும் அழகாய் 
கொஞ்சும்!
நீ தளிர் நடை போட்டு
நடக்கும் போது 
புவியும் வழுக்கி
இரசிக்கும்!
உனக்கு உணவு ஊட்ட 
வேண்டி தினமும் 
வானில் நிலவு
உதிக்கும்!
உன் கன்னாதில் சிதறிய 
சோற்றுப் பருக்கையில்
அழகிய சித்திரம் 
தெரியும்!
உன் பிஞ்சுக் கரங்களுள் 
சிக்கிய உலகம் 
மயங்கி உன்னிடம்
வீழும்!