நெஞ்சை  அள்ளும்
பிஞ்சு குழந்தையின் 
மழலை மொழியில் 
மணக்கிறது உண்மை!
இறையச்சம் கொண்ட
அடியார் எவர்க்கும்
வாய்மை மட்டுமே 
வாய் வழி வெளிப்படும்!
அழிவுகள் இங்கே 
அணுவினால் இல்லை
பொய்மையே எங்கும்
பேரழிவு தந்திடும்!
இயற்கையின் மொழி
இதயத்தின் ஒலி
சத்தியங்கள் இங்கே 
சந்திக்கு வரட்டும்
உன்னிப்பாய் கவனி
உலக அமைதி 
அங்கே தன் பிறக்கும்!