மண்ணில் வீழ்ந்தது மழைத்துளி   

மகிழ்விக்கான ஓர் அழைப்பொலி 

சிட்டுகள் அங்கே சிறகடிக்கும் 

சிறு இலைகளும் அசைந்து இசை கொடுக்கும்!

மகரந்தத் தூள்களின் பரிமாற்றம் 

மலர்களுக்கு இடையே அரங்கேற்றம் 

பாலைகளையும் சோலைகளாய் 

மாற்றிடும் மழைத்துளி வரவேற்போம் 

கொட்டும் மலையை கண்டவுடன் 

விவசாயிக்கு கொண்டாட்டம் 

காகித கப்பல் விடுவதற்கு 

வழியே இங்கு இல்லை எனினும் 

விடுமுறை கிட்டும் என்பதனால் 

சிறுவர்களுக்கும் கொண்டாட்டம் !

மண்ணில் வீழ்ந்த என்னை எண்ணி

நிமிர்ந்து பார்த்த விதைகளுக்கும் 

எனக்கும் ஆன உறவுகளை 

பாலித்தீன் குப்பை தடுப்பதாலே 

எனக்கு தானே மன வருத்தம் !